Wednesday, July 14, 2010

ஏளனத்திற்கு கிடைத்த சவுக்கடி (அக்பர்-பீர்பால் கதை)

(ஒரு நாள் அக்பர், பீர்பாலை எப்படியாவது மடக்க நினைத்து....)

அக்பர்: நம் நாட்டில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன என்பதை அறிந்துவருமாறு உத்தரவிட்டார்...

பீர்பால் சற்றும் யோசிக்காமல்: "2452 காக்கைகள் இருக்கின்றன மன்னா' என்று கூறினார்.

அக்பர் கோபத்துடன்: "2452 காக்கைக்கு மேல் இருந்தால் உன் தலைûயை சீவிவிடுவேன் என்று சினந்தார்...

அதற்கு பீர்பால்: வெளிநாட்டு காக்கைகள் தங்கள் உறவினர் காக்கையை பார்க்க வந்திருக்கும் என்றார்.

அக்பர்: "2452ற்கு குறைவாக இருந்தால்?' என்றார்

நம்ம நாட்டு காக்கைகள் தங்கள் உறவினரை காண சென்றிருக்கும் என்றார் பீர்பால்.

இந்து-முஸ்லீம்-கிறிஸ்து-மதம்.... எது உசத்தி?


ஒருகிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிலிருந்து புழுப்பூச்சிகளையும் கிருமிகளையும் உண்டு வந்தது.

ஒருநாள் கடலிலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அந்தக் கிணற்றில் வந்து விழுந்தது.
""நீ எங்கிருந்து வருகிறாய்?'' கிணற்று தவளைக் கேட்டது.

""கடலிலிலிலிருந்து'' கடல் தவளை சொன்னது.

""கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா?'' என்று கூறி ஒரு பக்கத்திலிலிருந்து எதிர்பக்கத்திற்குத் தாவி குதித்தது கிணற்றுத் தவளை.

""நண்பா! இந்த சின்னக் கிணற்றோடு எப்படி கடலை ஒப்பிடமுடியும்?'' என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத்தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, ""உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா?'' என்று கேட்டது.

""சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?''

""நீ என்ன சொன்னாலும் சரி, என்கிணற்றைவிட எதுவும் பெரியதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரியதாக எதுவும் இருக்கமுடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்! என்று கத்தியது கிணற்றுத்தவளை.

-விவேகானந்தர்

Friday, July 9, 2010

இப்படை தோற்கின்! எப்படை வெல்லும்?


ஊனம்.... ஊனம்.... இங்கே
ஊனம் யாருங்கோ?
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்......
ஊனம் இல்லைங்கே....

ஈழத்தமிழன்..........


என் பாட்டன் நிலத்தை தோண்டினான்
தங்கம் கிடைத்தது!

என் அப்பன் தோண்டினான்
தண்ணீர் வந்தது!

நான் நிலத்தை தோண்டினேன்
கன்னிவெடி பரிசாக கிடைத்தது!

(உயிர்பிழைத்திருந்தால்........)
என் மகன் நிலத்தை தோண்டினால்
வெறும் மனித மண்டையோடுகள் கிடைக்கும்!

Friday, July 2, 2010

ந(ரக)கர வாழ்க்கை


ஓட்டம்....

ஓட்டம்...

ஓட்டம்...

நடந்து செல்பவன், மிதிவண்டியில் செல்ல வேண்டி;

மிதிவண்டியில் செல்பவன், காரில் செல்ல வேண்டி;

காரில் செல்பவன், விமானத்தில் செல்ல வேண்டி.....


வாழ்நாள் முழுவதும்

இப்படி பலவகை

ஓட்டங்கள்......

பெரியாரின் தீவிர பக்தன்....


புரேக்கர்: வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்குப் போகிற பெண்ணை தான் கல்யாணம் பண்ணுவேனு சொன்னீங்க.....
இப்ப என்ன?- எந்த கிழமையிலும் கோயில் பக்கமே போகாத பெண்ணா வேணும்னு கேட்குறீங்க...

மாப்பிள்ளை: எல்லாம் அந்த தேவநாதசுவாமிகளின் லீலைதான்......

காலேஜ் லைஃப் வடிவேலு டயலாக்கில்..........


கிளாஸ் டெஸ்ட்: சொல்லவே இல்லை....

டீச்சிங்: புரியுது.. ஆனால் புரியல...

எக்ஸாம்: உக்காந்து யோசிப்பாய்ங்களோ....

அரியர்ஸ்: சண்டையில... கிழியாதா சட்டை எங்க இருக்கு?
வேணாம்... அழுதுருவேன்.....