
ஒருகிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிலிருந்து புழுப்பூச்சிகளையும் கிருமிகளையும் உண்டு வந்தது.
ஒருநாள் கடலிலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அந்தக் கிணற்றில் வந்து விழுந்தது.
""நீ எங்கிருந்து வருகிறாய்?'' கிணற்று தவளைக் கேட்டது.
""கடலிலிலிலிருந்து'' கடல் தவளை சொன்னது.
""கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா?'' என்று கூறி ஒரு பக்கத்திலிலிருந்து எதிர்பக்கத்திற்குத் தாவி குதித்தது கிணற்றுத் தவளை.
""நண்பா! இந்த சின்னக் கிணற்றோடு எப்படி கடலை ஒப்பிடமுடியும்?'' என்று கேட்டது கடல் தவளை.
கிணற்றுத்தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, ""உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா?'' என்று கேட்டது.
""சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?''
""நீ என்ன சொன்னாலும் சரி, என்கிணற்றைவிட எதுவும் பெரியதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரியதாக எதுவும் இருக்கமுடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்! என்று கத்தியது கிணற்றுத்தவளை.
No comments:
Post a Comment